இலங்கையில் மயிலை கொன்று சாப்பிட்ட பிரபல யூடிபரை கைது செய்ய கோரிக்கை
மந்துரு ஓயா தேசிய பூங்காவில் வெளிநாட்டவர் ஒருவரும், பூர்வீக குடிமக்கள் ஐவரும் இணைந்து மயிலை கொன்று எரித்து தின்ற விதம் தொடர்பான காணொளி தொடர்பான விடயங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஹெனானிகல வனவிலங்கு தள பாதுகாப்பு அதிகாரி டபிள்யூ. எம்.குமாரசிறி விஜேகோன் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர் மற்றும் ஐந்து பூர்வீக குடிமக்களை கைது செய்யுமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்தார்.
இது தொடர்பான காணொளி யூடியூப் சேனலில் வெளியாகி 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஐந்து ஆதிவாசிகளும் தம்பனை, கொடபாக்கினிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குழுவாகும், வெளிநாட்டவர் இந்த நாட்டிற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணி ஆவார்.
இச்சம்பவம் 2019 அல்லது 2020 ஆம் ஆண்டில் நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள , இந்தக் குழுவின் கூட்டுப் படம் மற்றும் 1964 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க கட்டளைச் சட்டங்கள் மற்றும் 1970 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கம் மற்றும் 1993 ஆம் ஆண்டு இலக்கம் 49 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றார்.
மேலும், 2012, 1937 ஆம் ஆண்டின் எண். 22, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு ஆணை எண். 02 மற்றும் எண். 32 இன் அதிகாரத்தின் படி, இந்த குற்றம் பொதுவான நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.