இலங்கையர்களை லெபனான் செல்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை!

அத்தியாவசிய வேலைகளைத் தவிர அடுத்த சில நாட்களில் லெபனானுக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலை அதிகரிக்கும் பட்சத்தில் இலங்கையர்களை உடனடியாக பிராந்தியத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)