ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வசிப்போரால் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஜெர்மனியில் அண்மைய ஆண்டுகளில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
ஜெர்மனியில் அதிகரிக்கும் வீட்டு வாடகை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
இந்தப் போக்கு இந்த ஆண்டிலும் தீவிரமடைந்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு விலை அதிகரிப்பால், வெப்பமூட்டும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து குத்தகைதாரர்கள் பெறும் பயன்பாட்டு கட்டணங்களிலும் இது பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் ஜெர்மனியில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை அதிகரிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் வீட்டு உரிரமயாளர்கள் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மாதாந்த அறவிடப்படும் வீட்டு வாடகைகளை அதிகரிக்க கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தில் 17 நகரங்களில் இது போன்ற நடவடிக்கைகள் அமுலில் இருந்துள்ளது.
நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் வாடகையில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் அறவிடப்படும் வாடகையின் அளவை அதிகரிக்க கூடாது என்று மாநில அரசாங்கம் முடிவு எடுத்து இருந்தது.
மேலும் பல நகரங்களுக்கு இந்த வாடகை அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.