இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை

தங்களை வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர்கள் பலர் மன்றாடுகின்றனர்.

டிரம்ப்பின் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை ஏற்றுக்கொள்ள அண்மையில் தடை விதித்த நிலையில் இந்த செய்தி வெளியானது.

அதற்குப் பிறகு மாணவர்கள் பலர் மற்ற கல்வி நிலையங்களுக்குத் தங்களை மாற்றிவிடும்படி கோரிக்கை விடுத்திருப்பதாய் ஹார்வர்ட் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களை வெளியில் அனுப்பித் தமது “Make America Great Again” முழக்கத்தை நிலைநிறுத்த டிரம்ப் விரும்புகிறார்.

அது மாணவர்களிடையே அச்சத்தையும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருப்பதாய் ஹார்வர்ட் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் மனநலனையும் கடுமையாகப் பாதித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதோ என்ற அச்சத்தில் சிலர் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதாகவும் பல்கலை கூறியது.

2024-2025ஆம் ஆண்டு ஹார்வர்ட் மாணவர்களில் 27 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டினராகும். அரசாங்கத்தின் முடிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி சென்ற வாரம் அமெரிக்க நீதிமன்றம் தடையை நீக்குவதாக அறிவித்தது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்