சிங்கப்பூர் மக்களை மூளை தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை
சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் மூளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோர் மூளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்கு மக்களிடம் விளக்கிச் சொல்லத் திட்டமிடப்படுகிறது.
நரம்பியல் கோளாறுகள், அவற்றின் ஆய்வுகள் குறித்து எடுத்துச் சொல்லப்படும். ஐந்து ஆண்டுக்கு முன் “மூளை வங்கி” அமைக்கப்பட்டது.
மரணத்துக்குப் பின் மூளையைத் தானம் செய்ய 380 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை வங்கிக்கு 9 மூளைகளே கிடைத்துள்ளன.
விரைவில் முன்னோட்டச் சோதனைகளுக்கு மூளைத் திசுக்கள் கொடுக்கப்படும்.
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம் Alzheimer’s போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதால் மூளை தானம் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்காசியாவின் ஒரே மூளை வங்கி சிங்கப்பூரில் செயல்படுகிறது. அதன் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் Duke-NUS மருத்துவப் பள்ளியும் A*Star ஆய்வு அமைப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உடன்பாடு செய்துகொண்டன.