ஜெர்மனி மாணவர்களுக்கு 602 யூரோ வழங்குமாறு கோரிக்கை
ஜெர்மனியில் பல்கலைகழக மாணவர்களுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சலுகையானது பற்றாக்குறை காணப்படுவதாக தற்பொழுது ஒரு அமைப்பானது தெரிவித்து இருக்கின்றது.
ஜெர்மனியின் மிக பெரிய தொழிற்சங்கமான டொச்சவிங் வியட்ச்சங்முன் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது பல்கலைகழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற பாஃவக் என்று சொல்லப்படுகின்ற நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அதேவேளையில் தற்போதைய கூட்டு அரசாங்கமானது தற்பொழுது மாணவர்களுக்கு பாஃவக் என்று சொல்லப்படுகின்ற இந்த நிதியத்தை 427 யுரோவில் இருந்து 452 யுரோவாக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இந்த தொழிற் சங்கமானது மாணவர்களுக்கு 602 யுரோக்களாக இந்த பாஃவக் என்று சொல்லப்படுகின்ற நிதியம் வழங்கப்பட வேண்டும் என்று தனது கோரிக்கையில் முன்வைத்துள்ளது.
அதனால் மாணவர்கள் தங்களது செவீனங்களை ஈடுசெய்ய முடியும் என தெரிவித்து இருக்கின்றது.