ரஷ்யாவில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!
கோவிட் மற்றும் போர் ரஷ்யாவில் “பத்தாண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறையை” ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து 14 ஆயிரம் முதலாளிகளிடம் ரஷ்ய வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின்படி, 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
2022 இல் நாட்டை விட்டு வெளியேறிய 1.3 மில்லியன் மக்களில் பலர் அதிக மதிப்புள்ள தொழில்களில் பணிப்புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் சுமார் 10% (100,000) பேர் திரும்பி வரவில்லை என்று ரஷ்ய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரலாற்று ரீதியாக அதிக குடியேற்றம் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவது, தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணியாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இது ரஷ்ய பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.