ஜெர்மனியில் வாடகை வீடுகளுக்கு நெருக்கடி – மாற்றமடையும் சட்டம்
ஜெர்மனியில் பல நகரங்களில் மலிவு விலையில் வீடுகள் இல்லாததால், வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் அதிகரித்து வரும் வாடகைச் செலவுகளை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.
வாடகைக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதால், ஜெர்மனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும் பாரிய அளவில் உயரவுள்ளது.
ImmoScout24 எனப்படும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுக்கு அமைய, ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் புதிய குத்தகைதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய வாடகை ஒப்பந்தங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு நிலைமை மிகவும் நிலையானதாக இருந்தது. அவை பொதுவாக மிகக் குறைவாக இருந்தபோதிலும் 2025 ஆம் ஆண்டுக்கு கடுமையாக அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடகையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சட்டம் இனி செல்லுப்படியாகாமல் போகும் என கூறப்படும் நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.