கனடாவில் வீட்டு வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக குறைந்து, பெப்ரவரி மாதம் சராசரி வாடகை 2,088 டொலராக குறைந்துள்ளது.
Rentals.ca மற்றும் Urbanation வெளியிட்ட அறிக்கையின்படி, பெப்ரவரியில் வாடகைகள் 4.8% வீழ்ச்சி கண்டுள்ளன.
இது ஏப்ரல் 2021க்கு பின்னர் பதிவான அதிகளவு வாடகைத் தொகை குறைவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானம் அதிகரித்துள்ளதால் வீடுகள் அதிகளவில் நிரம்பல் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள்தொகை வளர்ச்சி மந்தமாகியுள்ளதாகவும் இதனால் வாடகை குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுடன் வர்த்தக போர் காரணமாக பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளமையும வாடகை வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 4 times, 1 visits today)