இலங்கை செய்தி

ரணிலின் பாதுகாப்பு நீக்கம்? பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 50 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை உடனடியாக தீர்மானிக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள வதந்திகள் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேவையற்ற அதிகாரிகள் வெளியேற்றும் நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!