பிரித்தானியாவில் புதிய எரிசக்தி விலை வரம்பு குறித்த கணிப்பு வெளியீடு!
பிரித்தானியாவில் புதிய எரிசக்தி விலை வரம்பு கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்கணிப்பாளர் கார்ன்வால் இன்சைட் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ள புதிய விலைவரம்பு குறித்த கணிப்புக்களை அறிவித்துள்ளது.
கணிப்புகளின்படி ஒரு குடும்பத்தினருக்கான வாழ்க்கைச் செலவு 14 சதவீதத்தால் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் £1,656 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஒரு குடும்பத்திற்கான விலை வரம்பு £1,928 ஆக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய விலை வரம்பு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





