செய்தி

ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன்… நடிகையின் பரபரப்பு பேட்டி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இருப்பினும் அவருக்கு சைடு ரோல்களே கிடைத்து வந்ததால், அதையும் தட்டிக்கழிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது இரவின் நிழல் தான்.

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் ரேகா நாயர்.

அவர் நிர்வாணமாக நடித்ததை பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் டென்ஷன் ஆன ரேகா நாயர் அவர், கடற்கரைக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்தபோது அடிக்கப்பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பயில்வான் செத்தால் அன்றைய தினம் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரேகா நாயர். சமீபத்தில் கூட தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால் நிச்சயமாக நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருந்தார். அந்த பேட்டியிலேயே தனுஷ் மீது தனக்குள்ள காதலையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அரசியல் தலைவர்கள் குறித்து பேசிய ரேகா நாயர், ஓபிஎஸ் பற்றி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி, ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன் என கூறிய அவர், ஓபிஎஸ் கட்சி விட்டு கட்சி மாறும்போது, அவருக்கு தமிழ் எழுதுவதற்காக யாரோ ஒருவர் மூலம் அழைப்பு வந்தது. அதற்காக தினமும் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் ரொம்ப அமைதியான ஒரு மனிதர் என கூறி உள்ளார் ரேகா நாயர்.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!