சிரியாவில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் : கைதிகள் அனைவருக்கும் விடுதலை!
சிரியாவில் அதிபர் பஷார் அசாத்தின் கொடூரமான ஆட்சி இன்று திடீரென கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில் அசாத் தூக்கியெறியப்பட்டதாகவும், சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு குழுவினரின் வீடியோ அறிக்கையை சிரிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தமை தெளிவாக தெரியவருகிறது.
டமாஸ்கஸ் விமான நிலையம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிரிய பிரதம மந்திரி முகமது காசி ஜலாலி, அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு “தன் கையை நீட்ட” தயாராக இருப்பதாகவும் அதன் செயல்பாடுகளை ஒரு இடைநிலை அரசாங்கத்திற்கு மாற்றவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)