ஜெர்மனியில் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் – குவியும் விண்ணப்பங்கள்
ஜெர்மனியில் தேவாலயங்களில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ளும் அகதிகளை திருப்பி அனுப்புமாறு கூறப்படும் நிலையில் பலர் தேவாலயங்களுக்கு சென்று அகதி விண்ணப்பங்களை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
தேவாலயங்களில் அகதி விண்ணப்பங்கள் மேற்கொள்ளும் பொழுது 6 மாத கால அவகாசம் கடந்த பிறகு சாதாரண நிலைக்கு சென்று அகதி விண்ணப்பம் மேற்கொண்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு எண்ணிக்கையானது 2000 ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டு 2800 ஆக அதிகரித்து காணப்பட்டதாகவும், தெரியவந்துள்ளது.
அங்கோலா நாட்டை சேர்ந்த பெண்ணானவர் போர்த்துக்கள் நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அங்கோலா நாட்டில் பாரிய துன்புறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் அங்கோலாவுக்கு செல்ல முடியாத நிலையில் தேவாலயம் ஒன்றில் அகதி விண்ணப்பத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சோமாலியாவை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது. புரிந்துனர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேவாலயங்கள் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.