ஜெர்மனியில் அதிகரிக்கும் அகதிகள் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சி மற்றும் எதிர் கட்சியினர் பல விதமான கருத்துக்குகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான மோல்டாவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளில் பாதுகாப்பான நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருகின்ற அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க கூடாது என்ற வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதேவேயைளில் ஜெர்மனியின் முன்னள் சுகாதார அமைச்சரான ஜெக் ஸ்பான் அவர்கள் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஜெர்மன் நாட்டுக்கு வரும் அகதிகளை உடனடியாக கனா அல்லது ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் இந்த 2 ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ஜெர்மன் நாட்டுக்கு வரும் அகதிகளை அந்த நாடுகளுக்கு அனுப்பி அங்கே அகதி விண்ணப்பம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார்.
அதாவது ஐக்கிய நாடுகள் சாதனத்தின் படி அவர்கள் ஜெர்மன் நாட்டுக்குள் மட்டுமே அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற விடயம் பொருத்த மற்ற விடயம் என்று முன்மொழிந்ததுடன், இந்த நாட்டுக்கு அவர்கள் அனுப்பி அந்த நாட்டிலும் அகதி அந்தஸ்து பெற்று வாழலாம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில் இவரது கூற்றுக்கு எதிராக பல கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.