பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணம் – படையெடுக்கும் அகதிகள்
																																		பிரித்தானியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1,11,084 பேர் புகலிடக்கோரிக்கை செய்துள்ளனர்.
இவர்களில் 40 சதவீதம் பேர் பிரான்ஸில் இருந்து கடல் மார்க்கமான ஆபத்தான பயணம் மேற்கொண்டு நுழைந்தவர்கள் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 28,000 பேர் கடல் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். அகதிகள் நுழைவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையிலான அரசு பெரும் அழுத்தத்துக்குள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புகலிடக்கோரிக்கை அளித்தவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எரிட்ரியா, ஈரான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)
                                    
        



                        
                            
