சுவிட்ஸர்லாந்தை விட்டு வெளியேறும் அகதிகள் – அதிகரிக்கும் எண்ணிக்கை
சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கமைய, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 6,077 பேர் புகலிடம் மறுக்கப்பட்டு, வெளியேறியிருந்தனர்.
எனினும் 2024ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7,205 ஆக அதிகரித்துள்ளது என இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தை விட்டு வெளியேறிய 7,205 நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில், 2,467 (34.2%) பேர் சுதந்திரமாக வெளியேறினர்.
4,738 (65.8%) பேர் பாதுகாப்புடன் அவர்களது சொந்த நாட்டிற்கு, மூன்றாம் நாட்டிற்கு அல்லது தகுதிவாய்ந்த டப்ளின் மாநிலத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
(Visited 14 times, 1 visits today)