பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தங்கியிருந்த 46 அகதிகள் செவ்வாய்க்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர்.
சுகாதாரமற்ற முறையில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.
Charles-de-Gaulle மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்த அகதிகள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் அங்கு சென்றிருந்த பொலிஸார் அகதிகளை மீட்டு, பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்கள் மூன்று நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுப்பது அரசின் நோக்கமல்ல.. மாறாக ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு அகதிகளை வெளியேற்றி அழகுபடுத்தும் வேலையில் அரசு ஈடுபடுவதாக அகதிகள் நலன் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
(Visited 16 times, 1 visits today)