ஜெர்மனியில் நாடு கடத்தப்படும் அகதிகள் – அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றம்
ஜெர்மனியில் அகதிகளுடைய எண்ணிக்கையானது கூடுதலாக அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் காரணத்தனால் எதிர் கட்சியானது ஆளும் கூட்டு கட்சிக்கு தனது அழுத்தத்தை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் அதிபர் ஓலா ஸ்கொல்ஸ் அவர்கள் இந்த விடயத்தில் கடும் அதிருப்தியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது பல எதிர்கட்சிகள் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கொடுக்கின்ற அடிப்படை சட்டம் 16 ஐ முற்றாக அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருந்தாலும்,
ஜெர்மனியின் அதிபரானவர் இந்த கூற்றுக்கு இணக்கத்தை தெரிவிக்கவில்லை .அதாவது அகதிகள் அகதி அந்தஸ்தை கோருகின்ற சட்டமானது நடைமுறையில் இருக்கும் என்றும் மேலும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை வெகுவிரைவில் நாட்டை விட்டு கடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.