அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் – அமைக்கப்படும் தற்காலிக தங்குமிடங்கள்
அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்குவதற்காக எல்லைப் பகுதியில் பெரிய அளவில் ஏராளமான தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, அந்நாட்டில் தங்கியுள்ள சுமார் 50 லட்சம் மெக்சிகோ நாட்டவர்கள் தாய்நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான உணவு, தற்காலிக தங்குமிடம், மருத்துவச் சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 9 times, 9 visits today)