பிரான்ஸில் 2 பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அகதி – மரபணு சோதனையில் சிக்கினார்

பிரான்ஸில் 2 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நள்ளிரவு நேரத்தில் வீதியில் நடந்து சென்ற 21 வயதுடைய பெண் ஒருவரை குறித்த நபர் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.
அதன்பின்னர், மூன்று ஆண்டுகளின் பின்னர், கடந்த மார்ச் 4 ஆம் திகதி 8 மாத கர்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
பின்னர் மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டார்.
28 வயதுடைய மாலி நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவே மேற்படி இரண்டு பாலியல் பலாத்காரங்களை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)