ஜெர்மனியில் குவியும் அகதி விண்ணப்பங்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கைகள்
ஜெர்மனியில் கடந்த மாதம் அகதி அந்தஸ்து கோரியவரகளின் விபரம் வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதம் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையானது 18000 ஆக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15165 பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்பொழுது இரு வருடங்களுக்கு பின் மிக குறைந்தளவான அகதிகள் விண்ணப்பம் செய்த காலமானது 2024 ஆம் ஆண்டாக காணப்படுவதாக அகதிகளுக்கான சமஷ்டி அலுவலகம் புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அகதி விண்ணப்பம் செய்த 18000 பேரில் 16127 பேர் முதற் தடவையாக ஜெர்மனிக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும், 1603 பேர் முதல் அகதி விண்ணப்பம் மேற்கொண்ட நிலையில் 2வது தடவையாக அகதி விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செப்டம்பர் மாதம் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையானது 19684 ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மொத்தமாக 216861 பேர் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.