ஜெர்மனியில் குறையும் அகதி விண்ணப்பங்கள் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் குறையும் அகதி விண்ணப்பங்கள் – ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது பல நடவடிக்கைகளை அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வருகின்றது.
ஜெர்மனியின் உள்ளூராட்சி அமைச்சர் நான்சி அவர்கள் எல்லைக்காவல் சோதணைகளை தீவிரப்படுத்தி இருந்தார்.
அதாவது சில நாடுகளுடைய எல்லையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள் கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் மொத்தமான 329000 பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு இருந்துள்ளார்.
இதேவேளையில் தற்பொழுது இந்த புதிய கட்டுப்பாட்டு விதிகளினால் இந்த ஆண்டு ஆரம்பங்களில் ஜெர்மன் நாட்டுக்குள் வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுடைய எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்துள்ள கருத்து பிரகாரம் ஐரோப்பாவில் உள்ள நிராகரிக்கப்பட்ட அகதிகளை நாடு கடத்தல் விடயமானது மிகவும் துரதமான முறையில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.