பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த சுத்திகரிப்பு பணியாளர்கள் : அரசாங்கம் எடுத்த துரித நடவடிக்கை!
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் போது குப்பை குவியல்களை நீக்கும் வகையில் நகர் சுத்திகரிப்பாளர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
பாரிஸ் சிட்டி ஹால் கடந்த புதன்கிழமை செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி வேலை நிறுத்தத்தை ஜுலை முதல் செப்டம்பர் 08 வரை அறிவித்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளதுடன், பராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 08 வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சுத்திகரிப்பாளர்கள் போராட்டத்திற்கு தயாராகியிருந்தனர். இருப்பினும் நிலமையை சமாளிக்க பிரான்ஸ் அரசாங்கம் அவர்களின் போனஸ் உள்ளிட்ட கொடப்பனவுகளை அதிகரித்துள்ளது.
இதன்படி ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது அணிதிரட்டப்படும் தொழிலாளர்களுக்கான போனஸிற்கான கட்டமைப்பானது 600 யூரோக்கள் ($650) மற்றும் 1,900 யூரோக்கள் ($2,060) வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, பிரெஞ்சு ஓய்வூதிய முறையின் சீர்திருத்தத்தை எதிர்த்து குப்பை சேகரிப்பாளர்களால் நீண்ட வேலைநிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் பாரிஸ் தெருக்களில் குவிந்து கிடந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.