தமிழ்நாடு

தமிழ்நாடு – ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 10,+2 தேர்வுகளில் சாதனைபடைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

அண்மையில் வெளிவந்த சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில்,பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்,40 மாணவ,மாணவிகள் 480-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

மத்திய வாரிய உயர்நிலைக் கல்வி சி.பி.எஸ்.இ.2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீ சைதன்யா பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா நீலாம்பூர் பகுதியல் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் திருமதி சுஷ்மா போபண்ணா மற்றும் திருமதி சீமா போபண்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை பொது மேலாளர் ஹரி பாபு முன்னிலை வகித்தார்.இதில்,பத்தாம் வகுப்பில் நீலாம்பூர் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர் விபின் 495 மதிப்பெண்கள் பெற்று மண்டல அளவில் முதல் மதிப்பெண்ணையும், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தர்ஷனா 493 மதிப்பெண்களும்,492 மதிப்பெண்கள் பெற்ற சம்ப்ரீதி,491 மதிப்பெண்கள் பெற்ற மேதாஸ்ரீ,490 மதிப்பெண்கள் பெற்ற ஹரிணி,நிகிதா உட்பட 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 40 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பூச்செண்டுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்த சந்தோஷ் 486 மதிப்பெண்கள் எடுத்த மாலிகா,483 மதிப்பெண்கள் எடுத்த கார்னிகா சம்யுக்தா 481 மதிப்பெண்கள் பெற்ற நாரா தேஷ் நிகிதா ரெட்டி 480 மதிப்பெண்கள் எடுத்த பூமிநாதர்ஷன் 480 மதிப்பெண்கள் எடுத்த அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

25 மாணவ,மாணவிகள் 475-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சைதன்யா பள்ளி முதல்வர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்