இரண்டு குழந்தை நிதி உதவி தடையை நீக்கும் சட்டம்; பிரித்தானிய நிதி அமைச்சர் இன்று தாக்கல்
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி மீதான தடையை நீக்கும் சட்டத்தை நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், இந்தச் சலுகை ‘பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே’ வழங்கப்பட வேண்டும் என்று நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரேச்சல் ரீவ்ஸ், ஒரு குழந்தையின் தோல் நிறத்தைக் கொண்டு அவர்கள் வறுமையில் வாடலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
‘அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு தாய் என்.எச்.எஸ் (NHS) பணியாளராக இருந்து, அவர் வேறு நாட்டில் பிறந்தவர் என்பதற்காக அவரது குழந்தைகள் வறுமையில் வாட வேண்டும் என்று கூறுவது ஏற்க முடியாதது’ என அவர் சாடியுள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 5.5 லட்சம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் எனத் எதிர்பார்க்கப்படுகிறது





