வெளிநாட்டில் இருக்கும் நான்கு இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை
வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (26) சிவப்பு பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் கூறப்படும் தந்தை மகன் தம்பதியினருக்கும் மேலும் இருவருக்குமே சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு 2021ஆம் ஆண்டு பத்து சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், அவர்களில் நான்கு சந்தேக நபர்களுக்கு சிவப்பு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் மேலதிக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.