ஐரோப்பா

செங்கடல் நெருக்கடி – பிரித்தானியாவில் தேயிலைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பிரித்தானிய சுப்பர் மார்க்கெட் அலமாரிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பானமான தேனீரை கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விநியோக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், நாடு தழுவிய ரீதியில் சில கடைகளில் கறுப்பு தேநீர் கிடைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகள் இருப்பதாக சைன்ஸ்பரி எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் “தேயிலை விநியோகத்தை பாதிக்கும் விநியோக சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். சிரமங்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், விரைவில் முழு விநியோகம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என சைன்ஸ்பரி சுப்பர் மார்க்கெட் ஒரு விளம்ரத்தை காட்சிப்படுத்தியுள்ளது.

செங்கடல் வழியாக ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறுகளே இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.

இதற்கு தொடர்புடைய சுப்பர் மார்க்கெட்கள் தேநீர் விதியோகஸ்தர்களுடன் இணைக்கப்பட்டுள்ளமையினால் விநியோக சிக்கல்கள் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

“சில தேயிலை விநியோகத்திற்கு தற்காலிக இடையூறு உள்ளது, ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்பார்க்காததால் நுகர்வோர் மீதான தாக்கம் குறைவாக இருக்கும்.” என பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியத்தின் உணவு மற்றும் நிலைத்தன்மையின் இயக்குனர் ஆண்ட்ரூ ஓபி தெரிவித்துள்ளார்.

தேயிலை ஆசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலும் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் கென்யா ஆகிய நாடுகள் உலகளவில் முக்கால்வாசி தேயிலையை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!