மக்களே அவதானம்: இலங்கையில் பல மாகாணங்களுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 25, 2024 அன்று மாலை 4:00 மணி வரை செயல்படும் என இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் அதேவேளை வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





