ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்
ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது.
இதனால் கரடிகளைக் கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வது பற்றி அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
அனுமதி பெற்ற வேட்டைக்காரர்களையும், கரடிகளைக் கையாளக் கூடியவர்களையும் வாடகைக்குப் பெற நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாக ஜப்பானின் சுற்றுச்சூழல்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு மாத்திரம் நகர்ப்புறங்களை ஊடுருவிய கரடிகள் தாக்கி ஜப்பானில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.





