ஐரோப்பா

பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு!

பிரித்தானியாவின் சால்ஃபோர்டில் (Salford)  உள்ள இயற்கை காப்பகத்தில் மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து  தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார், சந்தை நகரமான எக்லெஸில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலுள்ள சந்து ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பிளாக்லீச் நீர்த்தேக்கம் மற்றும் கோலியரி வூட் ஆகிய இரண்டு இடங்களில் இருந்தும்  மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த எச்சங்கள் 60 வயதுடைய நபருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!