இலங்கை

கிரிமிட்டிய பகுதியில் நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன்( 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நானுஓயா கிரிமிட்டி நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக நேற்று இரவு வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இன்று (09) காலை வரை வீட்டுக்கு வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.இதனையடுத்து இவர் இவ்வாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!