இந்தியா

இந்தியாவில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் மீட்பு : தேர்தலில் செலவழிக்க வைத்திருந்தார்களாம்!

இந்தியாவின் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் பணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரேந்திர ராம் மற்றும் அவரது உள் வட்டத்துடன் தொடர்புடைய பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கணக்கில் வராத குறித்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கு தொடர்பாக வீரேந்திர ராம் பிப்ரவரி 2023 இல் ED ஆல் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலின் வீட்டு உதவியாளருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் குறித்த நாணய தாள்கள் சிதறி காணப்பட்டுள்ளன.

இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் காலப்பகுதியில் இந்த பணத்தை செலவழிக்கும் திட்டத்தில் இவ்வாறு சேமித்து வைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே