ஸ்வீடனில் வரலாறு காணாத பனிப்பொழிவு – வாகனங்களுக்குள் சிக்கி தவித்தவர்கள் மீட்பு

ஸ்வீடனில் 25 ஆண்டுகளில் காணாத அளவு கடுமையான குளிர் பதிவாகியுள்ளது.
தட்பம் உறைநிலைக்குக் கீழ் 43.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.
தெற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளன.
சாலையை மறைக்கும் அளவுக்கு பனி காணப்படுவதால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் தேங்கியுள்ள பனியை அகற்றிவிட்டு போக்குவரத்தை சீராக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)