வரலாறு காணாத அளவில் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு!
நுவரெலியாவில் இன்று மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இது 3.5°C ஆக பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய கண்காணிப்பு மையங்களிலிருந்து இன்று அதிகாலை சேகரிக்கப்பட்ட வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில் இந்த அளவீடு பதிவாகியுள்ளது.
மேலும் இது சமீபத்திய காலங்களில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.
அதேபோல் பண்டாரவெலவில் 11.5°C, பதுளையில் 15.1°C மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C என குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.
இன்று காலை அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3°C ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் பதிவாகியுள்ளது.





