வெளிநாட்டில் உள்ளோர் இலங்கைக்கு அனுப்பிய பணம் சாதனை பதிவு
வெளிநாட்டில் பணிபுரிவோர், இலங்கைக்கு மேற்கொண்ட பண அனுப்பல் நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20.7 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





