மீள்கட்டமைப்பு நிதியத்திற்கு மெகா பொறியியல் நிறுவனத்தின் நன்கொடை.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga Engineering (Pvt) Ltd நிறுவனம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
குறித்த காசோலையை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். பியதாச, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ரொஷான் மதரசிங்கவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.





