சிரியாவில் ஹபீஸ் அல் அசாத்தின் கல்லறையை அழித்த கிளர்ச்சியாளர்கள்!
rபதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் தந்தை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஹபீஸ் அல் ஆசாத்தின் குடும்ப ஊரில் உள்ள கல்லறையை சிரிய கிளர்ச்சியாளர்கள் அழித்துள்ளனர்.
பிபிசி செய்தி வெளியிட்ட வீடியோ காட்சிகள், கடலோர லதாகியா பிராந்தியத்தின் வடமேற்கில் உள்ள கர்தாஹாவில் எரியும் கல்லறையைச் சுற்றி ஆயுதம் ஏந்தியவர்கள் கோஷமிட்டு அணிவகுத்துச் செல்வதைக் காட்டியது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமியக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் அசாத்தின் 54 ஆண்டுகால ஆட்சியைக் கவிழ்த்தனர்.
அதே நேரத்தில், பஷர் அல்-அசாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றார், அங்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)