தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் கிளர்ச்சி படையினர் தாக்குதல் – 04 பேர் படுகாயம்!
தாய்லாந்தில் கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான நாரதிவாட் (Narathiwat), பட்டானி (Pattani) மற்றும் யாலா (Yala) முழுவதும் 11 பெட்ரோல் நிலையங்கள் தீப்பிடித்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அறிக்கை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் சுயாட்சிக்காக போராடி வருகின்றனர்.
இதன்காரணமாக 2004 ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





