கனடா பிரதமரின் பதவி விலகலுக்கான காரணம் – முடிவிற்கு வரும் 9 வருட பிரதமர் பதவி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ள நிலையில் 9 வருட பிரதமர் பதவி முடிவுக்கு வருகின்றது.
தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ளார்.
தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என தெரிவி;த்துள்ளதாக ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.
கனடாவிற்கு இணக்கமான அரசியல் அணுகுமுறையையும் அறிமுகப்படுத்துவதாகவும் பெண்களின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான போராட்டம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தும் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்..
ஆனால் ஆட்சியின் ஒவ்வொரு நாள் யதார்த்தம் ஏனைய மேற்குலக தலைவர்களை போல இவரையும் சோர்வடையச்செய்தது.
கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்கான ட்ரூடோ தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடவேண்டிய நிலை உருவானது.
நுகர்வோரையும் வர்த்தக சமூகத்தினரையும் காப்பாற்றுவதற்காக லிபரல் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வரவு செலவு திட்டப்பற்றாக்குறை அதிகரித்து வந்தது,விலைகள் அதிகரித்ததால் பொதுமக்களின் சீற்றமும் அதிகரித்தது.
எதிர்வரும் தேர்தல்களில் கட்சி தோல்வியடையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபகாலமாக வெளியிட்டு வந்த அச்சத்தினை அவர் சமாளித்துவந்துள்ளார்.
இதேவேளை ட்ரூடோவின் நெருங்கிய சகாவான நிதியமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற கோரி;க்கைகள் அதிகரித்துவந்துள்ளன.