இலங்கையில் தேங்காய் விலை அதிகரிப்புக்கும், தட்டுப்பாட்டுக்குமான காரணம் வெளியானது
9இலங்கையில் மக்கள் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டளவில் , தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்தது. அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்தது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை.
தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.