நிஜ வாழ்க்கை வாம்பயர் : கழுத்தில் அறிவாளுடன் புதைக்கப்பட்ட பெண்!! (புகைப்படம் இணைப்பு)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற போலந்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பயங்கரமான கோலத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கழுத்தில் அறிவாள் மற்றும் அவருடைய கட்டை விரல்களில் பூட்டு போடப்பட்டிருந்தது ஆய்வாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.
‘நிஜ வாழ்க்கை வாம்பயர்’ என அஞ்சப்படும் குறித்த பெண் கல்லறையில் இருந்து எழுவதை தடுப்பதற்காக மக்கள் இவ்வாறு சமய அனுஷ்டானங்களை கடைப்பிடித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஜோசியா என்று பெயரிட்டுள்ள குறித்த பெண் இறக்கும்போது 18 வயது இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவர் இறந்திருக்க கூடும் எனக் கூறப்படுகிறது.
எலும்பு ஸ்கேன்கள் ஜோசியாவின் மார்பக எலும்பில் ஒரு அசாதாரணத்தைக் கண்டறிந்துள்ளன, இது அவருக்கு உடல் ஊனம் இருந்திருக்கலாம், அது மிகுந்த வலியை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சிதைவுதான் அவளைக் கொடூரமாகப் பலியிட்டு புதைக்கப்படுவதற்கு முன்பு ஒரு காட்டேரியைப் போல பயப்பட வைத்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போலந்தின் டோரன் நகருக்கு தெற்கே உள்ள சிறிய கிராமமான பியென் வெளியே ஒரு வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 100 எலும்புக்கூடுகளில் சோசியாவும் ஒன்றாகும்.