ரஷ்யா மற்றும் யுக்ரேனின் அமைதி ஒப்பந்தத்தில் சிக்கல்

ரஷ்யா மற்றும் யுக்ரேனின் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தாம் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமாதானத்தைக் கொண்டு வரும் முயற்சியை நீண்டகாலத்துக்குத் தொடரமுடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பு படையெடுப்பினை ஆரம்பித்த நாள் முதல், சாத்தியமான யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா பல நிபந்தனைகளை விதித்து வருகிறது.
யுக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியினை பெறும் நோக்கில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முதல் படியை யுக்ரேன் எடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளிவிவகாரத்துறை செயலாளரின் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)