செய்தி விளையாட்டு

ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த RCB நிர்வாகம்

ஐபிஎல் பட்டத்தை ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெளியே உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் உள்ளே வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியதாக ஆர்சிபி அணி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆர்சிபி அணி கூட்ட நெரிசலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

“இன்று பிற்பகல் அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூருவில் கூடிய கூட்டத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்ததாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையறிந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

துயரமான உயிர் இழப்புக்கு ஆர்சிவி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நிலைமை குறித்து உடனடியாகத் தெரியவந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் மாற்றியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்.

எங்கள் ரசிகர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!