ஐரோப்பா

பர்கரில் எலிக்கழிவு ; 5 கோடி அபராதம் வழங்கும் மெக்டொனால்ட்ஸ்!

வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பர்கர் உணவில் எலிக்கழிவு இருந்ததால் பெண்ணொருவருக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி பர்கர், ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு பெண் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டில் சீஸ் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

வாங்கிய பர்க்ரை சாப்பிடத் தொடங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பெண் சாப்பிட்ட பர்கரில் எலியின் கழிவுகள் இருந்துள்ளன. அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண் வால்தம் பாரஸ்ட் கவுன்சிலை நாடி புகார் அளித்தார்.

Rat excrement in burger, shocked woman – McDonald's fined Rs 5 crore!

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தான் கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கியது தெரியவந்துள்ளது. புகார் தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதற்கான தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி, சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அத்துடன் பெண் சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை ரூ.22.6 லட்சம் மற்றும் கூடுதல் தொகை ரூ.19,537 என மொத்தம் சுமார் ரூ.5 கோடி அபராத தொகை தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்