செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஹண்டா வைரஸ் அச்சுறுத்தல் – 4 பேர் பலி – எலிகள் தொடர்பில் எச்சரிக்கை

அமெரிக்காவில் ஹண்டா வைரஸ் பாதித்து 4 பேர் உயிரிழந்தனர்.

அரிசோனா, கலிபோர்னியா மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எலியின் எச்சில் மற்றும் கழிவுகளால் ஹண்டா வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்றது.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி, வாந்தி ஆகியவை ஏற்படும் என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனை ஏற்பட்டு மரணம் கூட நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹண்டா வைரசுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் எலிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறினர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!