பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!
வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள்.
போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை நான் எப்படி பிடிக்கிறேன் பாருங்கள் என்ற சைகையோடு தடுக்க புல்லில் வழுக்கி கொண்டே சென்றார்.
இருவரும் ஒரே நேரத்தில் பந்து தடுக்க சென்றதால் குர்பாஸ் ரஷித்தின் மேல் தாண்டிப் பந்தை தடுக்க முயன்றார். ஆனால், குர்பாஸின் வலது மூட்டு, ரஷித்தின் தலையில் தொட்டவுடன் வேகமாக குர்பாஸ் வேகமாக குதித்தார். இதன் காரணமாக, ரஷித்கானுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
அதிர்ஷ்ட வசமாக குர்பாஸ் குதித்தபோது ரஷித் கான் போட்டிருந்த தொப்பி மட்டும் அவருடைய மூட்டு பட்டு கீழே விழுந்தது. கண்டிப்பாக காயம் பட்டிருந்தது என்றால் நிச்சயமாக ரஷித் கான் அடுத்த போட்டிகளில் விளையாடி இருப்பாரா? என்பது சந்தேகம் தான்.
மேலும், வங்காளதேசம் அணி ஆப்கானிஸ்தான் அணி மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு நாள் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.