ஆஸ்திரேலியாவில் மண் மூலம் பரவும் அரிதான நோய் : குயின்ஸ்லாந்தில் ஒருவர் பலி!

ஆஸ்திரேலியாவில் அரிதான ஆனால் ஆபத்தான மண் மூலம் பரவும் நோயான மெலியோய்டோசிஸால் வடக்கு குயின்ஸ்லாந்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு டவுன்ஸ்வில்லே பகுதியில் பதிவாகிய ஆறாவது மரணம் இதுவாகும். அதேநேரம் கெய்ர்ன்ஸ் பகுதியில் இந்த நோய் தாக்கத்தால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெப்பமண்டல நோய் மண் மற்றும் சேற்றில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் கனமழை காலங்களில் தூண்டப்படுகிறது.
டவுன்ஸ்வில்லே பொது சுகாதாரப் பிரிவு இயக்குனர் ஸ்டீவன் டோனோஹூ கூறுகையில், சுமார் ஒரு டஜன் நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மெலியோய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்த முதியவர்கள் பெரும்பாலும் உயிர்பிழைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)