சிங்கப்பூரில் 35 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகைக் குரங்கு
சிங்கப்பூரில் அழிந்துவரும் அரிய வகைக் குரங்கு மீண்டும் சிங்கப்பூரில் தென்பட்டுள்ளது.
Raffles “Banded Langur” என்ற குரங்கு இனமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகைக் குரங்கு இறுதியாக 35 ஆண்டுகளுக்கு முன்னர் புக்கிட் தீமாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காணப்பட்டது.
இம்முறை அந்தக் குரங்கு பாலம் ஒன்றில் இருந்தது 2 முறை கமராவில் பதிவாகியுள்ளது.
Presbytis femoralis என்ற அறிவியல் பெயரைக் கொண்ட அவ்வகைக் குரங்குகள் சிங்கப்பூரையும் தெற்கு தீபகற்ப மலேசியாவையும் பூர்வீகமாகக் கொண்டவை.
2021ஆம் ஆண்டு வரைக்கும் உள்ள கணக்கின்படி, அவ்வகைக் குரங்குகளில் 68 மட்டுமே சிங்கப்பூர் வனப்பகுதிகளில் வாழ்கின்றன





