செய்தி

அமெரிக்காவில் நாக பாம்பை போன்ற தோற்றம் கொண்ட அபூர்வ மீன் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நாக பாம்பை போன்ற தோற்றம் கொண்ட அரிய மீன் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளி நிறத்தில், 3.6 மீட்டர் நீளங்கொண்ட ‘oarfish’ எனும் அதை ஆய்வு செய்வதாகக் கடல்துறை நிபுணர்கள் கூறினர்.

1901ஆம் ஆண்டுக்குப் பிறகு கலிபோர்னியாவில் அந்த மீன் 20ஆம் முறையாகக் கரை ஒதுங்கியுள்ளது.

பேரிடர்கள் நேர்வதற்கு முன்னர் அவை கரை ஒதுங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

Oarfish பெரும்பாலும் 6 மீட்டருக்கும் மேல் நீளமாக வளரக்கூடியவை. பெருங்கடலின் மிக ஆழமான பகுதியில் அவை இருக்கும். அங்கு ஒளி எட்டமுடியாது.

மீன் உயிரிழந்த காரணத்தைக் கண்டறிய ஆய்வாளர்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்போவதாகக் கூறினர்.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!